Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
தினமும் காலையில் இந்த சாலட்டை 1 கப் சாப்பிடுங்க.. கெட்ட கொழுப்பு, கெட்ட நீர் வெளியேறி தொப்பை வேகமாக குறையும்..
Weight Loss Vegetable Salad In Tamil: உடல் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? காலை வேளையில் ஒரே மாதிரியான உணவை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று சிம்பிளாகவும், அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும் ஒரு ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் உடல் எடையைக் குறைக்கத் தூண்டும் ஒரு அருமையான வெஜிடேபிள் சாலட்டை சாப்பிடுங்கள்.
இந்த சாலட் புரோட்டீன் நிறைந்தது. எனவே இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு, கெட்ட நீரை வெளிறேற்றி, தசையைச் சுருங்கச் செய்து, தொப்பையை வேகமாக குறைக்க உதவும். இந்த சாலட்டை அடிக்கடி காலையில் செய்து சாப்பிட்டு வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

உங்களுக்கு வெஜிடேபிள் சாலட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் சாலட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* தண்ணீர் - சிறிது
* மீல் மேக்கர் - 50 கிராம்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது)
* சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் பூசணி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை - பாதி
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பச்சை பயறை நீரில் கழுவி, இரவு முழுவதும் ஊற வைக்க
வேண்டும்.
* மறுநாள் காலையில் அந்த பச்சை பயறை ஒரு துணியில் கட்டி, 8 மணிநேரம்
ஊற வைத்தால், முளைக்கட்டிய பச்சை பயறு தயார்.
* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, நீர் கொதிக்க
ஆரம்பித்ததும் மீல் மேக்கரை போட்டு 2 நிமிடம் ஊற வைத்து இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு,
சுடுநீரில் உள்ள மீல் மேக்கரை எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு, பின்
மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து எடுத்துவிட
வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மீல் மேக்கர், பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், மஞ்சள்
பூசணியை சேர்த்து, பச்சை மிளகாயையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம்
காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் மிளகுத் தூள், பாதி எலுமிச்சையின்
சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான
வெஜிடேபிள் சாலட் தயார்.



Click it and Unblock the Notifications






