Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இந்த சூப்பை வாரத்துக்கு 2 தடவ குடிங்க... உடம்புல இருக்குற எக்ஸ்ட்ரா கொழுப்பு சர்ருன்னு கரைஞ்சிரும்...!
Kollu Soup Recipe in Tamil: பொதுவாகவே சூப் வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது உடல் எடையை குறைக்க உதவும். இது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை ஆரோக்கியமாக கரைக்க உதவும். இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது முன்னோர் கூறியது.
உடல் எடையை ஏற்ற எள்ளும் உடல் எடையை குறைக்க கொள்ளும் பயன்படும் என்பதே அதன் அர்த்தம். சரி வாங்க உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளை வைத்து எப்படி சூப் செய்வது என் பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருள்கள்:
- கொள்ளு - 4 ஸ்பூன்
- பூண்டு - 5 பல்
- சின்ன வெங்காயம் - 8 அல்லது 10
- தக்காளி - 2
- இஞ்சி - சிறிதளவு (அரை இன்ச் அளவு)
- மிளகு - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
- பெருங்காயம் - 1ஃ2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
தாளிக்க:
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - சிறிது
- வரமிளகாய் - 2
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
- நன்கு பழுத்த சிவப்பு தக்காளியை கழுவி காம்பு பகுதியை நீக்கி இரண்டாக வெட்டி கொள்ளவும்.
- சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தின் மேற்பரப்பில் கருப்பு நிற பூஞ்சை இருந்தால் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
- வெங்காயத்தை ஒன்றிரண்டாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
- இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கொள்ளை சேர்த்து சிவந்து வாசம் வரும் வரை வறுக்கவும்.
- அதே போல் துவரம் பருப்பையும் தனியே வறுத்து ஆற விடவும்.
- பின் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக வறுத்து அதனுடன் சேர்த்து கொள்ளவும்.
- பின் வாணலியில் சிறிதளவு எண்ணெய் காய விடவும்.
- அதில் தோலுரித்து வைத்த வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து மென்மையாக வதக்கி ஆற விடவும்.
- அனைத்து பொருட்களும் நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- அரைத்தக் கலவையில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும்.
- பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- அதனுடன் கருவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து கொள்ளவும்.
- பின் கரைத்து வைத்த கலவையை ஊற்றி மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- தேவையான அளவு உப்பு மற்றும் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
- கடைசியாக பெருங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் ஆரோக்கியமான கொள்ளு சூப் ரெடி!



Click it and Unblock the Notifications
