Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
இந்த சிறுதானிய கஞ்சியை தினமும் காலையில் ஒரு கப் குடிங்க.. தொப்பை சீக்கிரம் குறையும்..
Weight Loss Kanji Recipe In Tamil: நீங்கள் உங்கள் எடையைக் குறைக்கும் டயட்டில் உள்ளீர்களா? வேகமாக அதே சமயம் ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா?
அப்படியானால் காலை உணவாக வரகரிசி மற்றும் சாமை அரிசியைக் கொண்டு, அத்துடன் முருங்கைக்கீரை சேர்த்து கஞ்சி செய்யுங்கள். இந்த கஞ்சி சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. வேகமாக உடல் எடையையும், தொப்பையையும் குறைக்க உதவி புரியும்.

உங்களுக்கு எடையைக் குறைக்க உதவும் சிறுதானிய முருங்கைக்கீரை கஞ்சி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிறுதானிய முருங்கைக்கீரை கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வரகரிசி - 100 கிராம்
* சாமை அரிசி - 100 கிராம்
* பாசிப்பருப்பு - 100 கிராம்
* தண்ணீர் - 8 கப்
* சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 8 பல் (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* முருங்கைக்கீரை - 1 கைப்பிடி
* எலுமிச்சை - பாதி
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் வரகரிசி மற்றும் சாமை அரிசியை
எடுத்து, அத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து நீர் ஊற்றி 2 முறை
கழுவிவிட்டு, பின் சுத்தமான நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து, அரிசி மற்றும் பருப்பை கழுவிவிட்டு, பின் அதை
குக்கரில் போட வேண்டும்.
* பின் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 8 கப் நீரை ஊற்ற
வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், நறுக்கிய
தக்காளியை சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மிளகுத் தூள், சோம்புத் தூள்,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்னர் குக்கரை மூடி உயர் தீயில் 1 விசில் விட்டு, பின் குறைவான
தீயில் 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து நன்கு கிளறி விட வேண்டும். கஞ்சி
மிகவும் கெட்டியாக இருந்தால், சுடுநீரை தேவையான அளவு ஊற்றி கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் 1 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து, குக்கரை அப்படியே
அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை
சாற்றினை சேர்த்து கலந்து பரிமாறினால், சுவையான சிறுதானிய
முருங்கைக்கீரை கஞ்சி தயார்...



Click it and Unblock the Notifications
