Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இந்த கஞ்சியை வாரம் 4 முறை காலையில் சாப்பிடுங்க.. உடல் எடை மடமடன்னு வேகமாக குறையும்...
Weight Loss Karunjeeraga Kanji Recipe In Tamil: தற்போது டயட்டில் இருக்கும் நிறைய பேர் தங்களின் உணவில் கஞ்சியை அதிகம் சேர்க்க விரும்புகின்றனர். குறிப்பாக இந்தியர்கள் தங்கள் உணவில் தானியங்களை அவசியம் உட்கொள்ள விரும்புவர். அதற்காக சிறுதானியங்களைக் கொண்டு பலவிதமான கஞ்சிகளை தயாரித்து உட்கொண்டு வருகின்றனர்.
ஆனால் சிறு தானியங்கள் மட்டுமின்றி, கருஞ்சீரகமும் ஒருவரது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவி புரியக்கூடியவை. ஏனெனில் கருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ, சி, கே, பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளன.

இந்த சத்துக்கள் அனைத்தும் நினைவாற்றலை மேம்படுத்த, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, கொலஸ்ட்ராலைக் குறைக்க, கவனத்தை மேம்படுத்த, எடையைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. இப்படிப்பட்ட கஞ்சீரகத்தை வெறுமனே சாப்பிடுவதை விடுத்து, அதைக் கொண்டு கஞ்சி தயாரித்து குடித்தால், இன்னும் சிறப்பாக உடல் எடையைக் குறைக்க முடியும்.
இப்போது உடல் எடையைக் குறைக்க உதவும் கருஞ்சீரக கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருஞ்சீரக கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* அரிசி குருணை - 1 கப்
* கருஞ்சீரகம் - 1/2 ஸ்பூன்
* வெந்தயம் - 1/2 ஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
* பூண்டு - 10 பல்
* கெட்டி தேங்காய் பால் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் 1 கப் அரிசி குருணையை ஒரு பாத்திரத்தில் போட்டு,
அத்துடன் 1/2 டீஸ்பூன் கருஞ்சீரகம் மற்றும் 1/2 டீஸ்பூன் வெந்தயத்தை
சேர்க்க வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, மூடி வைத்து வேக
வைக்க வேண்டும். குருணை நன்கு வேகும் சமயத்தில் கருஞ்சீரகமும்,
வெந்தயமும் வெந்துவிடும்.
* குருணை வெந்துவிட்டால், அதில் 10 பூண்டு பற்களை தட்டிப் போட்டு,
பூண்டு பற்களை நன்கு வேக வைக்க வேண்டும்.
* அதற்கு மிக்சர் ஜாரில் அரை மூடி தேங்காயை துருவி, சிறிது நீரை
ஊற்றி, நன்கு கெட்டியான தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பூண்டு வெந்ததும், அதில் 1 கப் கெட்டி தேங்காய் பாலை ஊற்றி கிளறி, 1
கொதி வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி, ஓரளவு குளிர்ந்ததும்,
சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறினால், சுவையான கருஞ்சீரக கஞ்சி தயார்.
இந்த கஞ்சிக்கு எலுமிச்சை ஊறுகாய் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications