Latest Updates
-
இதுல உங்க காது எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
11,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் முதலில் தோன்றிய பழம் எது தெரியுமா? இப்பவும் நாம இந்த பழத்தை சாப்பிடுறோமாம் -
திருமணத்திற்கு முந்தைய உறவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு உங்கள் உரிமையை மாற்றும்! -
சத்தான எள்ளுப்பொடி சாதம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - உடம்பு இரும்பு மாதிரி மாறிடும் -
பரோட்டா கடை வெஜ் சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
திருமண சீசனில் தங்கம் விலை திடீர் உயர்வு: பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறும் குடும்பங்கள்! -
ஜூன் 15-ல் உருவாகும் அரிய புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
ஆண்களே! சரும நிறத்தை அதிகரிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
இந்தியாவின் டாப் 5 பணக்கார முதலமைச்சர்கள் இவங்கதான் - தமிழ்நாடு முதலமைச்சர் எத்தனாவது இடத்தில் உள்ள தெரியுமா? -
காலசர்ப்ப யோகத்தால் இன்று முதல் ஜூன் 23 வரை இந்த 3 ராசிக்கு கஷ்ட காலமா இருக்கும்.. உஷார்..
மொறுமொறுப்பான... ருசியான... கிராமத்து ஸ்டைல் வெஜிடேபிள் கட்லெட்
Village Style Vegetable Cutlet Recipe In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. பொதுவாக குளிர்ச்சியான காலநிலையில் நல்ல காரசாரமாகவும், சூடாகவும், மொறுமொறுப்பாகவும் சாப்பிடத் தோன்றும். அதுவும் மாலை வேளையில் தான் இப்படியெல்லாம் தோன்றும்.
நீங்கள் எப்போதும் பஜ்ஜி, வடை, போண்டா என்று தான் செய்து சாப்பிடுவீர்களானால், அடுத்தமுறை கட்லெட் செய்யுங்கள். அதுவும் வீட்டில் காய்கறிகள் அதிகம் இருந்தால், அவற்றைக் கொண்டு வெஜிடேபிள் கட்லெட்டை செய்யுங்கள். இந்த வெஜிடேபிள் கட்லெட் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு கிராமத்து ஸ்டைல் வெஜிடேபிள் கட்லெட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* கேரட் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* கடலை மாவு - 1 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, சீரகம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் காய்கறிகளை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு கிளறி,
மூடி வைத்து, சில நிமிடங்கள் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் பாதியாக வெந்ததும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்
மசாலா மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து ஒரு பௌலில் கடலை மாவை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி
கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கடலை மாவை வாணலியில் சேர்த்து, கொத்தமல்லியைத் தூவி நன்கு
கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்.
* பின் ஒரு அகலமான தட்டில் எண்ணெயைத் தடவி, அதில் இந்த கடலை மாவு
கலவையை ஊற்றி பரப்பி, 30 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
* கலவை நன்கு குளிர்ந்ததும், ஒரு இன்ச் சதுர துண்டுகளாக வெட்டிக்
கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், இந்த கட்லெட் துண்டுகளைப் போட்டு
பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான வெஜிடேபிள் கட்லெட்
தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications