Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
வேர்க்கடலை சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல அரைச்சு பாருங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவீங்க..
Peanut Kara Chutney Recipe in Tamil: காலையில் இட்லிக்கு உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பெரும்பாலும் ஒரே மாதிரியான சட்னியைத் தான் செய்வீர்களா? அதுவும் உங்கள் வீட்டில் அடிக்கடி வேர்க்கடலை சட்னியை செய்யும் பழக்கம் உள்ளதா? அந்த வேர்க்கடலை சட்னியை வித்தியாசமான சுவையில் செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் வேர்க்கடலையுடன் ஒருசில பொருட்களை சேர்த்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் செய்யுங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில், அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். முக்கியமாக இப்படி சட்னி செய்தால் வீட்டில் உள்ளவர்கள் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு வேர்க்கடலை கார சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை எண்ணெய் - 3 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 50 கிராம்
* பெரிய வெங்காயம் - 3 (நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 10
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 4 பல்
* வரமிளகாய் - 6
* புளி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு, வரமிளகாய், சிறிது புளி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கி, குளிர வைத்து
மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* கடைசியாக தாளிப்பதற்கு ஓரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான வேர்க்கடலை கார
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications
