Latest Updates
-
சனி ஜெயந்தி அன்று சனிபகவானை இந்த மாதிரி வழிபடுங்க - உங்கள் பாவமெல்லாம் மன்னிக்கப்படும் -
பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு! சாமானிய மக்களின் பட்ஜெட் இனி என்னவாகும்? அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்! -
அங்கமாலி மாங்கா கறி ரெசிபி - இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க, வேற லெவல் சுவையில் இருக்கும் -
Shani Jayanti 2026: சனி ஜெயந்தி நாளில் இந்த பரிகாரங்களை செய்யுங்க.. ஏழரை சனியின் தாக்கம் குறையும்.. -
உன்னாவ் வழக்கு: அதிகாரத்தின் பிடியில் சிக்கிய நீதி! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை உறுதி - பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி! -
உலகிலேயே எந்த நாட்டில் பெட்ரோல் அதிக விலையில் விற்கப்படுகிறது? பாகிஸ்தானில் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா? -
தலைமுடி அடர்த்தியா நீளமா வளரணுமா? அப்ப சித்த மருத்துவர் கூறும் இந்த 3 கீரைகளை சாப்பிடுங்க..! -
இந்த 3 மாதங்களில் பிறந்தவர்கள் எல்லோரையும் விட அதிபுத்திசாலிகளாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ஜூன் வரை ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
காரைக்குடி வெண்டைக்காய் புளி பச்சடி ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்
மணமணக்கும்.. வெந்தயக் குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. 5 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்!
Vendhaya Kuzhambu Recipe In Tamil: கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வெயிலில் உடல் சூடு பிரச்சனையால் அதிகம் அவதிப்படக்கூடும். இதைத் தவிர்க்க உடலை குளிர்ச்சியாக்கும் உணவுகளை உட்கொள்வதே சிறந்த வழி. அப்படி உடல் சூட்டை குறைக்க உதவும் ஒரு பொருள் தான் வெந்தயம்.
இந்த வெந்தயத்தை தினமும் சிறிதை அப்படியே உட்கொள்வது மட்டுமின்றி, அவ்வப்போது வெந்தயத்தைக் கொண்டு குழம்பு தயாரித்து உட்கொண்டும் வரலாம். அதுவும் வெந்தய புளிக்குழம்பை ஒருமுறை செய்தால், 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். அதுவும் சூடான சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிட்டால் ருசி அள்ளும்.

உங்களுக்கு வெந்தய குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தய குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடிப்பதற்கு..
* பச்சரிசி - 2 டீஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - பெரிய எலுமிச்சை அளவு (2 கப் நீரில் ஊற வைத்து சாறு
எடுத்துக் கொள்ளவும்)
* தண்ணீர் - 1 கப்
* வறுத்து அரைத்த பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சரிசி, சீரகம்,
வெந்தயம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் பெரிய எலுமிச்சை அளவு புளியை 2 கப் நீரில் ஊற வைத்து,
பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், பெருங்காயத் தூள்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, கறிவேப்பிலை தூவி
நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு நன்கு வதங்கியதும், அதில் நறுக்கிய
தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, தக்காளி மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து, அத்துடன் 1 கப்
நீரை ஊற்றி கிளறி, அரைத்து வைத்துள்ள பொடியில் இருந்து 1 1/2 டேபிள்
ஸ்பூன் சேர்த்து கட்டிகளின்றி கலந்து, கொதிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வெல்லத்தை சேர்த்து, மூடி வைத்து குறைவான தீயில்
வைத்து, 10 நிமிடம் நன்கு எண்ணெய் பிரிய கொதிக்க வைத்து இறக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெயை சேர்த்து கலந்தால், சுவையான
வெந்தயக் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











