Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
காய்கறியே இல்லாத இந்த காரக்குழம்பு செஞ்சு பாருங்க... மதிய உணவுக்கு சூப்பரா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
Vendhaya Kulambu Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் மதிய உணவுக்கு சமைக்கப்படுவது சாம்பார் அல்லது புளிக்குழம்புதான், ஆனால் இந்த இரண்டையே எத்தனை நாட்கள்தான் செய்து கொண்டிருப்பது. இதுபோன்ற நேரத்தில் பொதுவாக குருமா அல்லது காரக்குழம்பு பக்கம் நம்முடைய கவனம் செல்லும்.
பொதுவாக காரக்குழம்பு என்றால் அதில் ஏதாவது காய்கறி சேர்த்துதான் செய்வோம். காய்கறிகள் இல்லாத நேரத்தில் வீட்டிலிருக்கும் வெந்தயத்தை வைத்தே சாதத்துக்கு அருமையான வெந்தய காரக்குழம்பு செய்யலாம். இந்த குழம்பு செய்வதற்கு எளிதானது அதேசமயம் சுவையானதும் கூட, கூடுதலாக இதில் சில ஆரோக்கிய நன்மைகளும் உள்ளது. இந்த பதிவில் சூப்பரான வெந்தயக் குழம்பை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- வெந்தயம் - 4 ஸ்பூன்
- வரமிளகாய் - 4
- மல்லி - 3 ஸ்பூன்
- சீரகம் - ஒரு ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 10
- பூண்டு - 8 பல்
- புளி - ஒரு எலுமிச்சை அளவு
- தேங்காய் துருவல் - அரை கப்
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- மேலே குறிப்பிட்டுள்ள அளவில் அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டை உரித்து வைக்கவும்.
- வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
- வரமிளகாய், மல்லி, சீரகம் இவை மூன்றையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- வறுத்த பொருட்களை பொடியாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். ஊற வைத்த வெந்தயத்தை வடிகட்டி வாணலியில் போட்டு வதக்கவும்.
- வதங்கியதும் நறுக்கின வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்..
- அதனுடன் அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதினை போட்டு வதக்கவும்.
- பச்சை வாசனை போனதும் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்க்கவும்.
- குழம்பு கொதித்ததும் புளியை கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- பின்னர் அடுப்பை குறைத்து வைத்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி வைக்கவும்.



Click it and Unblock the Notifications