Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பிபி, சுகர் காணாமல் போகணுமா? இந்த சப்பாத்தியை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க... இதுக்கு சைடு டிஷ்ஷே வேணாம்..
Vendhaya Keerai Masala Chapati Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இரவு நேரத்தில் சப்பாத்தி செய்வீர்களா? அதுவும் எப்போதும் வெறும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அப்படியானால் வீட்டில் வெந்தயக்கீரை இருந்தால், அதைக் கொண்டு வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தியை செய்து சாப்பிடுங்கள். இந்த சப்பாத்தி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, சத்தானதும் கூட.
அதுவும் உங்கள் வீட்டில் இரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் இருந்தால், அவர்களுக்கு இந்த சப்பாத்தியை அடிக்கடி செய்து கொடுத்தால், பிபி, சுகர் எல்லாம் காணாமல் போகும். முக்கியமாக இந்த சப்பாத்திக்கு சைடு டிஷ் எதுவுமே தேவைப்படாது. வெறுமனே அல்லது ரெய்தா இருந்தாலே போதும். அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த சப்பாத்தி. குறிப்பாக மிகவும் மென்மையாக இருக்கும்.

உங்களுக்கு வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 2 கப்
* கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* வெந்தயக்கீரை - 1 கைப்பிடி
* நெய் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் கடலை மாவை
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதில் சுவைக்கேற்ப உப்பு, 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2
டீஸ்பூன் சீரகத் தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மல்லித்
தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2
கைப்பிடி வெந்தயக்கீரையை சேர்த்து, கைகளால் நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து பிசைய வேண்டும்.
* பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு
பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் பிசைந்த மாவின் மேல் சிறிது எண்ணெய் தடவி, மூடி வைத்து 20
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 20 நிமிடம் கழித்து, பிசைந்த மாவை மீண்டும் நன்கு அழுத்தி பிசைய
வேண்டும்.
* அதன் பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒவ்வொரு உருண்டையாக எடுத்து, சப்பாத்தி போன்று மெல்லியதாக
தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல்லை சூடேற்ற
வேண்டும்.
* கல் சூடானதும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை போட்டு, எண்ணெய்
ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான வெந்தயக்கீரை
மசாலா சப்பாத்தி தயார்.



Click it and Unblock the Notifications