Latest Updates
-
September Matha Rasipalan 2026: செப்டம்பரில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
ஆசிரியையின் ஒரு அறை.. உயிரிழந்த சிறுவன்! இது எப்படி சாத்தியம் என்பது குறித்து விளக்கும் டாக்டர்! -
1/2 கிலோ மட்டன் வெச்சு.. இப்படி ஒருவாட்டி மசாலா அரைச்சு பிரியாணி செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
சிம்ம ராசிக்கு சென்றுள்ள புதன்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Vendhaya Keerai Coconut Milk Kanji Recipe In Tamil: தினமும் காலையில் எப்பவும் ஒரே மாதிரி இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான, அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஒரு காலை உணவை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் கஞ்சி செய்து சாப்பிடுங்கள். அதுவும் வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சியை அடிக்கடி செய்து சாப்பிடும் போது, உடல் சூடு குறைவதோடு, வயிற்றுப் புண்ணும் குணமாகும். முக்கியமாக இந்த கஞ்சி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு இந்த வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 சிட்டிகை
* மிளகு - 20
* வெந்தயம் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1
* பெரிய வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி (நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* தக்காளி - 1/2 (நறுக்கியது)
* வெந்தயக்கீரை - 1 கைப்பிடி
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* சோம்பு தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* புழுங்கல் அரிசி - 1 டம்ளர்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* தேங்காய் பால் - 3 டம்ளர்
* தண்ணீர் - 7 டம்ளர்
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பாதி பெரிய
வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் 1 கைப்பிடி வெந்தயக்கீரை, கொத்தமல்லியை சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு, சோம்புத் தூள், பெருங்காயத் தூள்
மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் 1 டம்ளர் புழுங்கல் அரிசியை கழுவி சேர்த்து 2 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், 3 டம்ளர் தேங்காய் பால் மற்றும் 7 டம்ளர்
நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி, 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி
கிளறினால், சுவையான வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி தயார்.



Click it and Unblock the Notifications