Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
கொளுத்துற வெயிலுக்கு காலையில் வெந்தய கஞ்சியுடன், புதினா துவையலை செஞ்சு சாப்பிடுங்க... டேஸ்ட் அள்ளும்..
Vendhaya Kanji With Mint Thuvaiyal Recipe In Tamil: காலையில் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? கொளுத்தும் வெயிலுக்கு உங்கள் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலும், உடல் சூடு பிடிக்காமலும் இருக்க வேண்டுமா?
உங்கள் வீட்டில் வெந்தயமும், புதினாவும் இருந்தால், அவற்றைக் கொண்டு உடலை குளிர்விக்கும் வெந்தய கஞ்சியையும், புதினா துவையலையும் செய்து கொடுங்கள். இந்த டிபன், வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடல்சூட்டையும் திறம்பட குறைக்கும். முக்கியமாக இந்த இஞ்சியை செய்வது மிகவும் சுலபம்

உங்களுக்கு வெந்தய கஞ்சியுடன் புதினா துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெந்தய கஞ்சி மற்றும் புதினா ,துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புழுங்கல் அரிசி - 1 கப்
* பச்சை பயறு - 1/4 கப்
* முளைக்கட்டிய வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 5-6 பல்
* துருவிய தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 1/4 லிட்டர்
* சுடு தண்ணீர் - தேவையான அளவு
* மோர் - தேவையான அளவு
புதினா துவையலுக்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* புளி - சிறிய துண்டு
* துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
* புதினா - 1 கட்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் புழுங்கல் அரிசி மற்றும் பச்சை பயறை எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி, 2 முறை அலசிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் முளைக்கட்டிய வெந்தயம், பூண்டு பற்கள், துருவிய
தேங்காய், சீரகம் மற்றும் 1 1/4 லிட்டர் நீரை ஊற்றி, குக்கரை
அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள்
மற்றும் வரமிளகாய் சேர்த்து, பருப்புகள் நன்கு பொன்னிறமாகும் வரை
வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் புளித் துண்டு, துருவிய தேங்காய் சேர்த்து லேசாக வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் 1 கட்டு புதினாவை சேர்த்து, 1 நிமிடம் வதக்கி இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது நீரைத் தெளித்து, சற்று
கொரகொரவென்று அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டால், புதினா
துவையல் தயார்.
* குக்கரில் உள்ள விசில் போனதும், குக்கரைத் திறந்து, கரண்டியால்
பருப்பையும், அரிசியையும் மசித்து விட்டு, பின் சுடுநீரை ஊற்றி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, தேவையான அளவு மோரை ஊற்றி கலந்து
கொள்ள வேண்டும்.
* அதன் பின் கலந்த கஞ்சியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, துவையலுடன்
தொட்டு சாப்பிட்டால், சுவையான வெந்தய கஞ்சியும், புதினா துவையலும்
தயார்.



Click it and Unblock the Notifications