Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
வெண்டைக்காயை வைச்சு இந்த மாதிரி சைடிஷ் ஒருதடவை செஞ்சு பாருங்க... சாதத்தோட சாப்பிட அட்டகாசமாக இருக்கும்...!
Vendakkai Pachadi Recipe in Tamil: வெண்டைக்காய் என்றால் யாருக்குதான் பிடிக்காது. பெரும்பாலான மக்களுக்கு பிடித்த மற்றும் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகளில் ஒன்று வெண்டைக்காய். ஏனெனில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் வெண்டைக்காயில் உள்ளது. வெண்டைக்காயை பொதுவாக சாம்பார் அல்லது புளிக்குழம்பு வைத்தோ அல்லது பொரியல் செய்தோ சாப்பிடுவோம்.
ஆனால் வெண்டைக்காயை வைத்து பச்சடி செய்தால் அட்டகாசமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பொதுவாக பச்சடி என்றால் மாங்காய் அல்லது கத்தரிக்காய் போன்றவற்றை காய்கறிகளை வைத்துதான் செய்வார்கள். ஆனால் வெண்டைக்காய் பச்சடியும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

பொதுவாக மதியம் சாம்பார் சாதத்திற்கு என்ன சைடிஷ் செய்யலாம் என்று குழம்புபவர்களுக்கு ஈஸியாக செய்யக்கூடிய இந்த வெண்டைக்காய் பச்சடி சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஈஸியான மற்றும் சுவையான வெண்டைக்காய் பச்சடியை எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- பிஞ்சு வெண்டைக்காய் - கால் கிலோ
- புளிக்காத கெட்டித் தயிர் - அரை கப்
- கடுகு - 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 4
- உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
- அச்சு வெல்லம் - சிறிதள்வு
- புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- அரிசி மாவு - 2 ஸ்பூன்
செய்முறை:
- காய்ந்த மிளகாயை சிறு, சிறு துண்டுகளாக கிள்ளி, காம்பெடுத்து வைத்துக் கொள்ளவும்.
- வெண்டைக்காயை சிறிது நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
- பிறகு புளியை தேவையான அளவு தண்ணீரில் ஊற வைத்துக் கொண்டு மண் இல்லாத படி வடிகட்டிதனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகிய இவற்றை எல்லாம் வறுத்துக் கொண்டு நீங்கள் நறுக்கிய வெண்டைக்காயையும் போட்டு அது வேகும் அளவிற்குத் தீயாமல் வதக்கவும்.
- பிறகு புளித் தண்ணீரை வெண்டைக்காயில் ஊற்றி தேவையான அளவு உப்பைப் போட்டு நன்கு கிளற வேண்டும்.
- வெண்டைக்காய் பச்சை வாசனை போகும் வரை நன்கு வேக வைக்கவும், அதன்பின் சுவையை அதிகரிக்க ஒரு சிறிய அச்சு வெல்லத்தை போட்டு அது நன்கு கரையும் வரையில் கிண்டி, அச்சு வெல்லம் நன்கு கரைந்த மாத்திரத்தில் சிறிதளவு அரிசி மாவு கரைத்து ஊற்றி இறக்கி வைக்கவும்.
- பின்னர் நன்கு ஆறிய பிறகு புளிக்காத தயிர் சேர்க்க வேண்டும்.
- சுவையான வெண்டைக்காய் பச்சடி ரெடி. இது சாம்பார் மற்றும் ரசம் சாதத்திற்கு சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications