Latest Updates
-
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது!
வெண்டைக்காய் சட்னி ரெசிபி... இந்த சூப்பரான சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமில்ல சாதத்துக்கும் செமையா இருக்கும்...!
Vendakkai Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு பொதுவாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி நேரம் இருந்தால் சாம்பார் அல்லது தக்காளி குழம்பு போன்றவை சைடிஷாக செய்யப்படுகிறது. ஆனால் இவை நாளடைவில் சலித்து விடும். இந்த சூழ்நிலையில் புதிய சட்னிகளை அரைப்பது அவசியம். அதிலும் அந்த சட்னி காய்கறியில் செய்யப்படுவதாக இருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
வெண்டைக்காயின் நன்மைகள்ப் பற்றி நாம் நன்கு அறிவோம். வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்பது காலம் காலமாகி இருந்து வரும் நம்பிக்கை. எனவே இந்த காய்கறியில் சட்னி செய்து சாப்பிடுவது சுவையுடன், ஆரோக்கியத்தையும் கொடுக்கும். இந்த வெண்டைக்காய் சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துக்கும் சூப்பராக இருக்கும்.

தேவையானப் பொருட்கள்:
- நறுக்கிய வெண்டைக்காய் - 1 கப்
- பச்சை மிளகாய் - 2
- துருவிய தேங்காய் - அரை கப்
- வேர்க்கடலை - 2 ஸ்பூன்
- இஞ்சி - 2 துண்டு
- கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை - ஓரு கைப்பிடி
செய்முறை:
- ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெயை சேர்த்து மிதமாக
சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய
வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும். பிஞ்சு வெண்டைக்காயாக இருந்தால்
சுவை நன்றாக இருக்கும்.
- 2 முதல் 3 நிமிடங்கள் வெண்டைக்காயை வதக்கி, நன்கு மென்மையாகும் வரை
வதக்கி விட்டு அடுப்பை அணைக்கவும். அதன்பின் அவற்றை ஒரு பாத்திரத்தில்
மாற்றி ஆற வைக்கவும்.
- இப்போது அதை மிக்ஸி ஜாருக்கு மாற்றி துருவிய தேங்காய், வேர்க்கடலை,
இஞ்சி மற்றும் கொத்தமல்லி இலைகளையும் சேர்க்கவும்.
- பின்னர் இதில் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
அரைக்கவும்.
- இதை நன்றாக பேஸ்டாக அரைத்து, சட்னியை ஒரு பாத்திரத்திற்கு
மாற்றவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கரண்டியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் பெருங்காயம் சேர்த்து தாளித்து சில நொடிகளுக்கு பின்னர்
சட்னியில் ஊற்றவும்.
- சட்னியை நன்கு கிளறவும், சுவையான வெண்டைக்காய் சட்னி ரெடி.
- இது இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்துக்கும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
