Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வீட்டுல வெள்ளரிக்காய் இருந்தா.. இப்படி ஒருவாட்டி சாம்பார் செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Cucumber Sambar Recipe In Tamil: கோடைக்காலம் என்பதால் மார்கெட்டுகளில் வெள்ளரிக்காய் விலைக் குறைவில் விற்பதைக் காணலாம். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. கோடையில் இந்த வெள்ளரிக்காயை அதிகம் உட்கொள்ளும் போது தாகம் தணிவதோடு, உடலும் நீரேற்றத்துடன் இருக்கும். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் வெள்ளரிக்காயை சாப்பிட மறுக்கிறார்களா?
அப்படியானால் அவர்களுக்கு வெள்ளரிக்காய் கொண்டு சாம்பார் செய்து கொடுங்கள். இந்த வெள்ளரிக்காய் சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். இதுவரை நீங்கள் வெள்ளரிக்காய் கொண்டு சாம்பார் செய்ததில்லை என்றால், அடுத்தமுறை சாம்பார் வைக்கும் போது இந்த வெள்ளரிக்காய் சாம்பாரை செய்யுங்கள்.

உங்களுக்கு வெள்ளரிக்காய் சாம்பாரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளரிக்காய் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பருப்பு வேக வைப்பதற்கு...
* துவரம் பருப்பு - 1/2 கப்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* தண்ணீர் - 2 கப்
சாம்பார் மசாலாவிற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* காஷ்மீரி வரமிளகாய் - 2
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 2 கொத்து
* சின்ன வெங்காயம் - 8 (நறுக்கியது)
* வெள்ளரிக்காய் - 1/4 கிலோ (விதைகளை நீக்கி
துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - 1 1/2 கப் + தேவையான அளவு
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
* பொடித்த வெல்லம் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் குக்கரில் கழுவிய துவரம் பருப்பை சேர்த்து, அத்துடன்
தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் 2 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து,
குக்கரை மூடி, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மசித்து கொண்டு பருப்பை மசித்து
விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு,
மல்லி, வெந்தயம், பெருங்காயத் தூள், வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய்
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைத்து,
மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நிறம் மாற வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் துண்டுகளாக்கப்பட்ட வெள்ளரிக்காயை சேர்த்து 3-4
நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி மூடி வைத்து 6-7 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் மூடியைத் திறந்து, அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து,
அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து, தேவையான அளவு நீரை
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் புளி நீர் மற்றும் பொடித்த வெல்லத்தை சேர்த்து கிளறி
ஒரு கொதி விட்டு, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான
வெள்ளரிக்காய் சாம்பார் தயார்.



Click it and Unblock the Notifications