Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
காலையில் இந்த கஞ்சியை தினமும் ஒரு கப் குடிச்சா.. தொப்பை குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்க..
Vegetable Barley Kanji Recipe In Tamil: உங்களுக்கு பானை போல தொப்பை இருக்கா? அந்த தொப்பையை குறைக்கணுமா? அதுக்கு தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறீர்களா? அதே சமயம் டயட்டையும் மேற்கொள்கிறீர்களா? அப்படியானால் காலையில் அந்த தொப்பையைக் குறைக்க உதவும் சில காலை உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொண்டு வாருங்கள்.
முக்கியமாக ஒருசில கஞ்சி தொப்பையை குறைக்க உதவும். அதில் ஒன்று தான் பார்லி கஞ்சி. அதுவும் இந்த கஞ்சியுடன் காய்கறிகளை சேர்த்து செய்யும் போது, சுவையாக இருப்பதோடு, நீண்ட நேரம் வயிறும் நிரம்பியிருக்கும்.

உங்களுக்கு வெஜிடேபிள் பார்லி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெஜிடேபிள் பார்லி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பார்லி - 1 கப்
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - 5 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பார்லி அரிசியை
போட்டு, நன்கு வறுக்க வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து
உருகியதும், வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸை சேர்த்து 3-4 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து கிளறி, 5 கப்
நீரை ஊற்றி கிளறி, மஞ்சள் தூள் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி
கலந்து விட வேண்டும்.
* பின் பொடித்து வைத்துள்ள பார்லி அரிசியை சேர்த்து கிளறி, குக்கரை
மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
கிளறினால், சுவையான வெஜிடேபிள் பார்லி கஞ்சி ரெடி...!



Click it and Unblock the Notifications
