Latest Updates
-
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம்
உளுந்து வடை
தென்னிந்திய உணவுகளில் வடை மிகவும் பிரபலமானது. அதிலும் உளுந்து வடை என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் தென்னிந்திய ஹோட்டல்கள் எங்கு சென்று இட்லி அல்லது பொங்கல் கேட்டாலும், அத்துடன் இந்த உளுந்து வடையையும் தான் வைத்து தருவார்கள்.
ஆனால் இத்தகைய வடையை காலையில் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. மாலையில் காப்பி அல்லது டீ குடித்துக் கொண்டே, வீட்டில் செய்து சாப்பிடலாம். சரி, இப்போது அந்த உளுந்து வடையை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
இஞ்சி - 1 இன்ச்
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பை 2 கப் தண்ணீர் விட்டு, இரவு படுக்கும் போது ஊற வைத்து விட வேண்டும்.
பின் மிளகை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் உளுத்தம் பருப்பை கழுவி, அதனை லேசாக தண்ணீர் விட்டு, நன்கு மென்மையாக சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்த உளுந்து மாவில் மிளகுத் தூள், நறுக்கி வைத்திருந்த இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
அதே சமயம் ஒரு பாலிதீன் கவரை எடுத்துக் கொண்டு, அதில் எண்ணெய் சிறிது தடவி, கொஞ்சம் உளுந்து மாவை எடுத்து, வட்டமாக தட்டி, எண்ணெய் காய்ந்ததும், அதில் போட்டு பொன்னிறமாக முன்னும், பின்னும் பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான உளுந்து வடை ரெடி!!! இதனை தேங்காய் சட்னி மற்றும் ஒரு கப் காப்பி அல்லது டீ குடித்துக் கொண்டே சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications