Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
தக்காளி மற்றும் வெங்காய சட்னி
சட்னியில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. இங்கு அதில் மிகவும் எளிமையான ஒரு சட்னி ரெசிபியைக் கொடுத்துள்ளோம். இதற்கு தக்காளி மற்றும் வெங்காயம் இருந்தால் போதும். மேலும் இதனை பேச்சுலர்களுக்கு ஏற்ற ஒரு சட்னி ரெசிபி என்று கூட சொல்லலாம்.
சரி, இப்போது அந்த தக்காளி மற்றும் வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 2
தக்காளி - 4-5
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் வெங்காயத்தை உரித்து, அதனை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் தக்காளியை கழுவி, அதனையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸியில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பௌலில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றினால், சுவையான தக்காளி மற்றும் வெங்காய சட்னி ரெடி!!!



Click it and Unblock the Notifications