Latest Updates
-
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்..
பேச்சுலர்களுக்கான... சிம்பிளான தவா மஸ்ரூம்
சப்பாத்திக்கு எப்போதும் மசாலா, கிரேவி என்று செய்து போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களான காளான் மற்றும் குடைமிளகாயை வைத்து ஒரு சைடு டிஷ் தயாரித்து சாப்பிடுங்கள். இது உண்மையிலேயே அற்புதமாக இருக்கும்.
இந்த ரெசிபியின் பெயர் தவா மஸ்ரூம். இது பேச்சுலர்கள் எளிதில் சமைத்து சாப்பிடும் அளவில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த தவா மஸ்ரூம் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மஸ்ரூம்/காளான் - 1 கப் (நறுக்கியது)
குடைமிளகாய் - 1/4 கப் (நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 1/4 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி, சீரகத்தைப் போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக 2 நிமிடம் வதக்கவும். அதற்குள் தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின் அந்த அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனைப் போக நன்கு வதக்க வேண்டும்.
பின்பு அதில் தேவையான அளவு உப்பு தூவி பிரட்டி, காளானை சேர்த்து 3-5 நிமிடம் நன்கு கிளறி விட்டு, காளான் மசாலாவை நன்கு உறிஞ்சும் படி வேக வைக்க வேண்டும்.
பிறகு குடைமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லி தூவி பிரட்டி இறக்கினால், தவா மஸ்ரூம் ரெடி!!!
Image Courtesty: sharmispassions



Click it and Unblock the Notifications
