Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
புத்தாண்டு ஸ்பெசல் சாம்பார்

தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – 1 கப்
முருங்கைக்காய் – 2
கத்தரிக்காய் – 3
காரட் - 1
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 2
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – 1 சிறிய ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
கடுகு, உளுந்து வெந்தையம் – தாளிக்க
பெருங்காயத்தூள் – சிறிதளவு
அரைக்க தேவையானவை
வரமிளகாய் – 5
கொத்தமல்லி – 3 டீ ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
மிளகு – 1 டீ ஸ்பூன்
சாம்பார் செய்முறை
முதலில் துவரம் பருப்பை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
அரைக்கவேண்டிய பொருட்களை வாணலியில் எண்ணெய் விடாமல் வறுத்து மிக்சியில் பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
முருங்கை, கத்தரி, காரட் போன்றவைகளை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி போட்டு சேர்த்து வதக்கவும். அத்துடன் காய்கறிகளை சேர்த்து வதக்கவும். அத்துடன் சிறிதளவு உப்பு போட்டு அரைத்து வைத்துள்ள பொடியை பொட்டு நன்றாக கிளறி சிறிதளவு தண்ணீர், கரைத்து வைத்த புளி ஊற்றி கொதிக்க வைக்கவும். இத்துடன் வேகவைத்துள்ள துவரம்பருப்பை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.
காய்கள் நன்றாக வெந்த உடன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வெந்தையம் போட்டு தாளித்து ஊற்றவும். சாம்பாரை அடுப்பில் இருந்து இறக்கும் முன்பு கடைசியாக பெருங்காயத்தூள் போடவும். சுவையான அரைத்து விட்ட சாம்பார் ரெடி. சாதத்திற்கு ஏற்ற சத்தான சாம்பார்



Click it and Unblock the Notifications
