Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
பேச்சுலர்களுக்கான... பன்னீர் மசாலா
பன்னீர் நிறைய பேருக்கு மிகவும் பிடித்த உணவுப் பொருளாக இருக்கும். அப்படி உங்களுக்கு பன்னீர் ரொம்ப பிடிக்கும், ஆனால் அதை எப்படி சமைப்பது என்று தெரியாமல் இருந்தால், தமிழ் போல்ட் ஸ்கை ஒரு ஈஸியான மற்றும் காரமான பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளது.
குறிப்பாக இந்த ரெசிபி பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். மேலும் இது சப்பாத்தி, ரொட்டி போன்றவற்றிற்கு மிகவும் சூப்பராக இருக்கும் சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!
,இதுப்போன்று வேறு: பேச்சுலர்களுக்கான சிக்கன் மசாலா ரெசிபி

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 600 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
தக்காளி - 3 (அரைத்தது)
சில்லி சாஸ் - 200 மி.லி
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
வெண்ணெய் - 60 கிராம்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதே வாணலியில் மீண்டும் சிறிது எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கி, மல்லி தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து பிரட்டி, வேண்டுமானால், சிறிது எண்ணெயும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளி மற்றும் சில்லி சாஸ் ஊற்றி, கலவையை கொதிக்க விட வேண்டும்.
கலவையானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் வெண்ணெய் மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, வெண்ணெயை உருக வைக்க வேண்டும்.
வெண்ணெயானது உருகியதும், அதில் பொரித்து வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், காரமான பன்னீர் மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications
