Latest Updates
-
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம்
சோயா பீன்ஸ் குருமா
புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்த சோயா பீன்ஸில், இது தவிர வேறு பல சத்துக்களும் அதிகமாக உள்ளன. சோயா பீன்ஸ் மிகவும் சுவையான உணவுப் பொருள். இதனை வாரத்திற்கு 2 முறையாவது உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில் இது பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும். அதுவும் இதனை சாதத்திற்கோ அல்லது சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளும் படியாக, குருமா போன்று செய்து சாப்பிடலாம்.
இப்போது அந்த சோயா பீன்ஸ் குருமாவை எப்படி எளிதில் செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உலர் சோயா பீன்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பட்டை - 2
கிராம்பு - 4
துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் சோயா பீன்ஸை இரவில் நீரில் ஊற வைத்துக் கொள்ளவும் அல்லது 4-5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் 1 பட்டை, 2 கிராம்பு, பச்சை மிளகாய், சோம்பு, துருவிய தேங்காய் போட்டு நன்கு நைஸாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மீதமுள்ள பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
வெங்காயமானது பொன்னிறமானதும், தக்காளி மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து, மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் வேக வைத்துள்ள சோயா பீன்ஸ் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான சோயா பீன்ஸ் குருமா ரெடி!!!



Click it and Unblock the Notifications
