Latest Updates
-
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ரவா தேங்காய் தோசையும், தக்காளி சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
கனவில் பணத்தை பார்ப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? -
July Born Personality: ஜூலை மாதம் பிறந்தவங்களோட குணாதிசயம் உண்மையில் எப்படி இருக்கும் தெரியுமா?
கத்திரிக்காய் சாம்பார்
பெரும்பாலான வீடுகளில் வெள்ளிக்கிழமை வந்தாலே சாம்பார், பொரியல், வடை என்று கமகமக்க சமைத்து மதிய வேளையில் சாப்பிடுவது வழக்கம். அதிலும் ஏதேனும் பண்டிகை என்றால் சொல்லவே வேண்டாம். இன்று கார்த்திகை தீபம் என்பதால், பலர் காலையில் இருந்து வீட்டை சத்தம் செய்து, சமைக்க நேரம் கூட இல்லாமல் இருப்பார்கள்.
ஆகவே மதிய வேளையில் மிகவும் ஈஸியாகவும், சுவையாகவும் ஒரு சாம்பார் செய்ய நினைத்தால் கத்திரிக்காய் சாம்பார் செய்யுங்கள். வேண்டுமானால் இந்த சாம்பாருடன் முருங்கைக்காயும் சேர்த்துக் கொள்ளலாம். சரி, இப்போது அந்த கத்திரிக்காயை சாம்பாரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 4 (நறுக்கியது)
துவரம் பருப்பு - 1/2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
புளி - 1 நெல்லிக்காய் அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 3 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் புளியை நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து பருப்பை மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி, பின் கத்திரிக்காயை சேர்த்து நன்கு கத்திரிக்காய் வேகும் வரை வதக்க வேண்டும்.
அடுத்து அதில் மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, மிளகாய் தூள், சாம்பார் பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் புளிச்சாற்றினை ஊற்றி, வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கத்திரிக்காய் சாம்பார் ரெடி!!!
Image Courtesy: kamalascorner



Click it and Unblock the Notifications