Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சிவராத்திரி ஸ்பெஷல்: சேவ் தக்காளி சப்ஜி
சிவராத்திரிக்கு விரதம் இருப்பவர்கள், விரதம் முடிந்ததும் ஒருசில உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். அப்படி சமைக்கும் போது வேகமாக சமைக்குமாறான சமையலையே தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் இங்கு ஒரு குஜராத்திரி ஸ்டைல் ரெசிபியான சேவ் தக்காளி சப்ஜியை சிவராத்திரி விரதத்திற்கு கொடுத்துள்ளோம்.
இந்த ரெசிபி வித்தியாசமாக இருந்தாலும், விரதம் முடிந்து செய்து சாப்பிடுவதற்கு ஏற்றது. சரி, இப்போது அந்த குஜராத்தி ரெசிபியான சேவ் தக்காளி சப்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
தக்காளி - 8 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
கல் உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சேவ் - 1 கப்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு 5 நிமிடம் மிதமான தீயில் வதக்க வேண்டும்.
பின்பு வெல்லத்தை நீரில் கரைத்து, அதனை வாணலியில் ஊற்றி 5-7 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதனை இறக்கும் போது, அதில் நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு இறக்க வேண்டும்.
பின் அதன் மேல் சேவ்வை தூவி அலங்கரித்து, உடனே சாதத்துடன் சாப்பிட வேண்டும். இதனால் சேவ்வில் உள்ள மொறுமொறுப்பு போகாமல் சாப்பிடும் போது நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications