Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
சேனைக்கிழங்கு கூட்டு
மதிய வேளையில் எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து அழுத்துப் போயிருக்கும். ஆகவே அப்போது சற்று வித்தியாசமாக உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் பல சத்துக்களை உள்ளடக்கிய சேனைக்கிழங்கை, கூட்டு போன்று செய்து, சாதத்துடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
கீழே அந்த சேனைக்கிழங்கு கூட்டின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை முயற்சித்து, எப்படியிருந்தது என்று சொல்லுங்கள்.
தேவையான பொருட்கள்:
சேனைக்கிழங்கு - 500 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
மைசூர் பருப்பு - 1/2 கப் (நீரில் ஊற வைத்தது)
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
புளி சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 2
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய் போட்டு மொறுமொறுவென்று வதக்கி இறக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் தேங்காய், சீரகம் மற்றும் வரமிளகாய் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஊற வைத்துள்ள மைசூர் பருப்பை நன்கு நீரில் கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு துண்டுகளாக்கப்பட்ட சேனைக்கிழங்கு, மைசூர் பருப்பு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறி விட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
சிறிது நேரம் கழித்து, குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து புளிச்சாற்றினை ஊற்றி, தீயை குறைவில் வைத்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
அடுத்து, வரமிளகாய் வதக்கிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடேற்றி, கடுகு, பெருங்காயத் தூள், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அடுப்பை அணைத்துவிட்டு, அதனை தூக்கி குக்கரில் ஊற்றி கிளறினால், சூப்பரான சேனைக்கிழங்கு கூட்டு ரெடி!!! இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
