Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
உருளைக்கிழங்கு சீசுவான்
சைனீஸ் ஹோட்டல் சென்றால் அங்கு சீசுவான் ரைஸ் என்ற சைனீஸ் கலவை சாதத்தைப் பார்த்திருப்பீர்கள். இது வித்தியாசமான சுவையில் சைனீஸ் சாஸ்கள் சேர்த்து செய்யப்படும் ஒரு அருமையான சாதம். ஆனால் அந்த சீசுவான் ரைஸ் போன்றே உருளைக்கிழங்கு சீசுவான் என்ற சைனீஸ் ரெசிபியும் உள்ளது. இதனை வீட்டிலேயே சிம்பிளான செய்முறையுடன் செய்யலாம்.
இங்கு அந்த உருளைக்கிழங்கு சீசுவான் ரெசிபியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கிற்கு...
உருளைக்கிழங்கு - 3
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
சீசுவான் கிரேவிக்கு...
பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
பூண்டு - 3 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
சீசுவான் சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
சோயா சாஸ் - 2 டீஸ்ழுன்
தண்ணீர் - 4-6 டேபிள் ஸ்பூன்
வெள்ளை வினிகர் - 1/2 டீஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன் (2 டேபிள் ஸ்பூன் நீரில் கலந்து கொள்ளவும்)
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + பொரிப்பதற்கு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை நீளமாக வெட்டி, குளிர்ந்த நீரில் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் நீரை முற்றிலும் வடித்து, அதில் சோள மாவு, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கிரேவி செய்யும் முறை...
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து தீயை அதிகரித்து 1-2 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின் அதில் வரமிளகாய் சேர்த்து 1-2 நிமிடம் வதக்கி, பின் சோயா சாஸ், சீசுவான் சாஸ், வினிகர், உப்பு, மிளகுத் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, பின் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.
கலவை நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் சோள மாவு பேஸ்ட் சேர்த்து 4-5 நிமிடம் மீண்டும் கொதிக்க விட வேண்டும்.
அடுத்து, அதில் வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், உருளைக்கிழங்கு சீசுவான் ரெடி!!!



Click it and Unblock the Notifications
