Latest Updates
-
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க..
வாழைக்காய் கிரேவி

தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 5
கடுகு - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
புளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 5
இஞ்சி - 1/2 இன்ச்
அரிசி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் இஞ்சி, பூண்டு மற்றும் அரிசியை தண்ணீர் ஊற்றி, நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
பின் வாழைக்காயின் தோலை சீவி, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, மென்மையாக வேக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலையை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு, அரிசி பேஸ்ட்டை போட்டு, மிளகாய் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு சிறிது நேரம் கழித்து, அதில் புளி சாற்றை சேர்த்து நன்கு கலந்து, 2 கப் தண்ணீர் மற்றும் உப்பை போட்டு கலக்க வேண்டும்.
மசாலாக் கலவையானது கொதித்ததும், அதில் வாழைக்காயை சேர்த்து, மசாலா சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான வாழைக்காய் கிரேவி ரெடி!!!



Click it and Unblock the Notifications
