Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
ராஜ்மா பரோட்டா

தேவையான பொருட்கள்:
சிவப்பு காராமணி (ராஜ்மா) - 1 கப் (வேக வைத்து, மசித்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பரோட்டாவிற்கு...
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பெரிய பௌலில் பரோட்டாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொட்களையும் போட்டு, தண்ணீரை மெதுவாக ஊற்றிக் கொண்டே, மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தை போட வேண்டும். சீரகம் வெடித்ததும், அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, பின் தக்காளி சாற்றை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
பின்னர் மசித்து வைத்துள்ள சிவப்பு காராமணி, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறி, மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
அடுத்ததாக, பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவை, சப்பாத்தி போல் தேய்த்து, அதன் நடுவே அந்த காராமணி கலவையை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் லேசாக தேய்த்து, தனியாக தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.
பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தி போன்ற பரோட்டாவை முன்னும் பின்னும் எண்ணெய் தேய்த்து, நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்தையும் செய்ய வேண்டும்.
இப்போது சுவையான ராஜ்மா பரோட்டா ரெடி!!!



Click it and Unblock the Notifications
