Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பஞ்சாபி ஸ்டைல் தட்டை பயறு மசாலா
வட இந்தியாவில் பிரபலமான ஒரு ரெசிபி தான் பஞ்சாபி தட்டை பயறு மசாலா. இந்த ரெசிபியானது மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். இந்த ரெசிபி சாதம் மற்றும் சப்பாத்திக்கு மிகவும் சூப்பராக இருக்கும்.
இங்கு அந்த பஞ்சாபி தட்டை பயறு மசாலாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தவறாமல் முயற்சி செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:
தட்டை பயறு - 2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 4 (நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு - 6 பற்கள் (நறுக்கியது)
பச்சை மிளகாய - 2 (நறுக்கியது)
பிரியாணி இலை - 1
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்
செய்முறை:
முதலில் தட்டை பயறை வெதுவெதுப்பான நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை கழுவி குக்கரில் போட்டு, போதிய அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து 4 விசில் விட்டு இறக்கி, நீரை வடித்து தனியாக ஒரு பௌலில் தட்டை பயறை வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு தக்காளியை போட்டு, தக்காளி நன்கு மசியும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
கலவையானது நன்கு குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், கிராம்பு, பட்டை சேர்த்து தாளித்து, பின் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, அத்துடன் மிளகு தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள தட்டை பயறை சேர்த்து, 6-7 நிமிடம் கலவை சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, அதன் மேல் பிரஷ் க்ரீம் மற்றும் கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான பஞ்சாபி ஸ்டைல் தட்டை பயறு மசாலா ரெடி!!!



Click it and Unblock the Notifications
