Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
புளியோதரை
தேவையான பொருட்கள்:
1 கிலோ பச்சரிசி, 100 கிராம் புளி, 200 மில்லி நல்லெண்ணைய், 10 காய்ந்த மிளகாய், 1 கொத்து கறிவேப்பிலை,அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், 50 கிராம் கடலைப் பருப்பு, 1 துண்டு வெங்காயம், 2 தேக்கரண்டி எள், 2தேக்கரண்டி உளுந்து பருப்பு, 1 தேக்கரண்டி கடுகு, தேவையான அளவு உப்பு
செய்முறை:
அரிசியை ஊற வைத்து, பின்பு அதை சாதமாக வடித்து, ஆற வைக்க வேண்டும்.
கடலைப் பருப்பை ஊற வைக்க வேண்டும். வெந்தயம், எள் ஆகியவற்றை வெறும் வாணலியில் போட்டு வறுத்துபொடி செய்து கொள்ள வேண்டும். பெருங்காயத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும். மிளகாயை நறுக்கிவைத்துக் கொள்ளவும். புளியைக் கெட்டியாகக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
எண்ணையைப் பாத்திரத்தில் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் ஊறவைத்தகடலைப் பருப்பை எடுத்துப் போடவும். கடலைப் பருப்பு சிவந்ததும் உளுந்துப் பருப்பு, கறிவேப்பிலை,மிளகாயைப் போடவும்.
மிளகாய் வதங்கிய பின்பு கரைத்த புளியை ஊற்றி உப்பு போட்டுக் கொதிக்க வைக்கவும். பொடி செய்தபெருங்காயம், மஞ்சள் தூள் ஆகியவற்றையும் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் அதை இறக்கி வைத்து,ஆறின சாதத்தில் கலந்து நன்கு கிளறவும். கிளறும்போது பொடி செய்த வெந்தயம், எள் இரண்டையும் கலக்கவும்.



Click it and Unblock the Notifications
