Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
உருளைக்கிழங்கு மொச்சை வறுவல்
உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு ஓர் அருமையான மற்றும் வித்தியாசமான உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. இந்த ரெசிபியின் ஸ்பெஷல் உருளைக்கிழங்குடன் மொச்சையை சேர்த்து வறுவல் செய்வது தான். இது சாம்பார் சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு மொச்சை வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து வீட்டில் முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1 (பெரியது)
மொச்சை - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
மசாலாவிற்கு...
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு - 2 பற்கள்
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கு மற்றும் மொச்சையை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, 3 விசில் விட்டு, 5 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
பின்னர் விசில் போனதும் குக்கரை திறந்து, நீரை முற்றிலும் வடிகட்டி, உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு கத்தியால் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸியில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் மொச்சையை சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பின் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து, நன்கு நீர் வற்றும் வரை பிரட்டி இறக்கினால், உருளைக்கிழங்கு மொச்சை வறுவல் ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
