Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பேரிக்காய் மற்றும் உலர் திராட்சை சட்னி
குழந்தைகளுக்கு அதிக காரம் இல்லாத சட்னியை தினமும் யோசித்து அலுத்துவிட்டீர்களா? அப்படியானால் ஒரு சூப்பரான சட்னி ரெசிபியைக் கீழே கொடுத்துள்ளோம். அந்த சட்னியானது பேரிக்காய் மற்றும் உலர் திராட்சை கொண்டு செய்யப்படும் ஒரு சூப்பரான சட்னி. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியது. மேலும் இது ஒரு ஜாம் போன்றும் இருக்கும்.
இதனை சரியாக பராமரித்து வந்தால் நீண்ட நாட்கள் வைத்திருக்கலாம். சரி, இப்போது அந்த பேரிக்காய் மற்றும் உலர் திராட்சை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பேரிக்காய் - 1 1/2 கிலோ (தோலுரித்து நறுக்கியது)
நாட்டுச்சர்க்கரை - 1 கப்
வெள்ளை வினிகர் - 1 கப்
பால்சமிக் வினிகர் - 4 டீஸ்பூன்
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச் (துருவியது)
பூண்டு - 3 பற்கள் (பொடியாக நறுக்கியது)
உலர் திராட்சை - 1/2 கப்
கிராம்பு - 10
பட்டை - 1 இன்ச் (5-6)
உப்பு - 2 டீஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை
முதலில் ஒரு பெரிய வாணலியில் வெள்ளை வினிகர் மற்றும் நாட்டுச்சர்க்கரையை போட்டு, நன்கு கொதிக்க விட வேண்டும்.

செய்முறை
அடுத்து அதில் மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 1 மணிநேரம் நன்கு கலவை கெட்டியாகும் வரை வேக வைக்க வேண்டும்.

செய்முறை
பின்பு அந்த கலவையை இறக்கி, மத்து கொண்டு மசிக்க வேண்டும்.

செய்முறை
பிறகு அதனை ஒரு காற்று புகாத ஜாடியில் போட்டு, காற்றுபுகாதவாறு மூடி வைக்க வேண்டும்.

செய்முறை
இப்போது சூப்பரான பேரிக்காய் மற்றும் உலர் திராட்சை சட்னி ரெடி!!! இந்த சட்னியை சரியாக பராமரித்து வந்தால், 3-4 வாரங்கள் வரை நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
