Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
பன்னீர் பஜ்ஜி
பஜ்ஜி என்றாலே அனைவரது நாவில் இருந்தும் நீர் ஊறும். அந்த வகையில் பெரும்பாலும் வாழைக்காய், உருளைக்கிழங்கு, மிளகாய் போன்றவற்றைக் கொண்டு மட்டும் தான் பஜ்ஜி செய்து சாப்பிட்டிருப்போம். ஆனால் பன்னீரைக் கொண்டு பஜ்ஜி செய்திருப்போமா? என்ன புதிதாக உள்ளதா? ஆம், உண்மையில் பன்னீரைக் கொண்டும் பஜ்ஜி செய்யலாம்.
மேலும் இது பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும். குறிப்பாக பன்னீர் பஜ்ஜி செய்வது என்பது எளிமையானது. இப்போது பன்னீர் பஜ்ஜியின் செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம் (சிறிதாக நறுக்கியது)
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் பன்னீரை வேண்டிய வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பன்னீர் துண்டுகளை கடலை மாவு கலவையில் நனைத்து, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான பன்னீர் பஜ்ஜி ரெடி!!!



Click it and Unblock the Notifications