Latest Updates
-
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
ஓணம் ஸ்பெஷல் இஞ்சி புளி
கேரளாவில் ஓணம் பண்டிகையன்று பல்வேறு வித்தியாசமான கேரள பாரம்பரிய ரெசிபிக்களானது சமைக்கப்படும். அப்படி கேரள பாரம்பரிய ரெசிபிக்களில் ஒன்று தான் இஞ்சி புளி. இந்த இஞ்சி புளியானது சாம்பார் சாதம், தயிர் சாதம், இட்லி மற்றும் தோசை போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும்.
இங்கு அந்த கேரளா இஞ்சி புளி ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி - 3/4 கப் (தோலுரித்து பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 7 (பொடியாக நறுக்கியது)
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
வெல்லப் பாகு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கடுகு - 3/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 2
செய்முறை:
முதலில் புளியை 3/4 கப் வெதுவெதுப்பான நீரில் போட்டு 1/2 மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயத்தைப் போட்டு லேசாக வறுத்து இறக்கி குளிர வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அடுத்து அதில் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.
கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து, கலவை கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
கலவையானது கெட்டியாகிவிட்டால், அதில வெல்லப் பாகு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் வெந்தயப் பொடி சேர்த்து, 2 நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி இறக்கினால், இஞ்சி புளி ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
