Latest Updates
-
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா?
காளான் குழம்பு
அக்டோபர் மாதத்தில் காளான் அதிகம் கிடைக்கும். ஆகவே அத்தகைய காளானை முடிந்த வரையில் அதிகம் சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் காளானில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. இத்தகைய நன்மைகளைப் பெற வேண்டுமானால், இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அக்டோபர் மாதத்தில் காளான் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதால், காளானை வைத்து பல்வேறு ரெசிபிக்களை செய்து சாப்பிடலாம்.
அதிலும் காளான் சூப், காளான் மசாலா, காளான் குழம்பு என்று பலவாறு காளானை சமைத்து சாப்பிடலாம். இப்போது அதில் காளான் குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
பட்டன் காளான் - 200 கிராம் (நறுக்கியது)
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
தக்காளி - 3/4 கப் (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன் (அரைத்தது)
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1 இன்ச்
செய்முறை:
முதலில் காளானை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமானதும், அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். பின் தக்காளியை சேர்த்து, தக்காளியை நன்கு வதக்க வேண்டும்.
பிறகு காளான், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து சிறிது நேரம் பிரட்டி விட வேண்டும்.
பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, காளான் நன்கு வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.
பின்னர் தேங்காயை ஊற்றி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியை தூவினால், சூப்பரான காளான குழம்பு ரெடி!!! இதனை சாதம், சப்பாத்தி, புலாவ் ஆகியவற்றுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
