Just In
- 19 min ago எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- 8 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 9 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 11 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
Don't Miss
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Movies இன்ஸ்டாவில் காதலரின் போட்டோக்களை டெலிட் செய்த ஸ்ருதிஹாசன்.. சாந்தனுவை பிரிந்தாரா?
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
மசாலா வடை குழம்பு
அனைவருக்கும் மசாலா வடை பற்றித் தெரியும். ஆனால் மசாலா வடை குழம்பு பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், மசாலா வடையைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறு அருமையான சுவையில் இருக்கும். மேலும் வித்தியாசமான குழம்பு செய்து சாப்பிட நினைப்போருக்கு மசாலா வடை குழம்பு ஏற்ற ஒன்றாக இருக்கும்.
இங்கு மசாலா வடை குழம்பின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை செய்து சுவைத்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா
வடை
-
10
வெங்காயம்
-
1
(பொடியாக
நறுக்கியது)
பச்சை
மிளகாய்
-
2
மல்லிப்
பொடி
-
2
டீஸ்பூன்
மிளகாய்
தூள்
-
1
1/2
டீஸ்பூன்
மஞ்சள்
தூள்
-
1
சிட்டிகை
துருவிய
தேங்காய்
-
5
டீஸ்பூன்
சோம்பு
-
1/2
டீஸ்பூன்
முந்திரி
-
5
இஞ்சி
-
சிறு
துண்டு
எண்ணெய்
-
2
டீஸ்பூன்
கிராம்பு
-
2
மிளகு
-
1/4
டீஸ்பூன்
கறிவேப்பிலை
-
சிறிது
மல்லி
-
1
டீஸ்பூன்
உப்பு
-
தேவையான
அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு மற்றும் முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும்.
பின்னர் அதில் தேங்காய் சேர்த்து நன்கு வதக்கி, பின் இஞ்சி சேர்த்து வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பிறகு அதனை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, கிராம்பு, மிளகு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி விட வேண்டும்.
பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
அடுத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
குழம்பானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மசாலா வடைகளைப் போட்டு, குழம்பில் வடை நன்கு ஊற்றியதும், அதனை இறக்கினால், மசால் வடை குழம்பு ரெடி!!!
Image Courtesy: swapnaskitchen