Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
மசாலா பணியாரம்
வீட்டில் எப்போதும் இட்லி சுட்டு போர் அடித்திருந்தால், அப்போது அந்த இட்லி மாவைக் கொண்டு சூப்பரான முறையில் பணியாரம் செய்து சாப்பிடலாம். அதிலும் இதனை காலை உணவாக செய்து சாப்பிடுவது மிகவும் எளிது. குறிப்பாக பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ரெசிபியும் கூட.
எனவே காலையில் தாமதமாக எழுந்தால், அப்போது பதட்டப்படாமல், வீட்டில் இட்லி மாவு இருந்தால், அதனை மசாலா பணியாரமாக செய்துக் கொடுக்கலாம். அந்த மசாலா பணியாரத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 2 கப்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1-2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1/2 இன்ச் (துருவியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
துருவிய தேங்காய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை ஊற்றி, அதில் எண்ணெயை தவிர, மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் ஊற்றி தேய்த்து, கலந்து வைத்துள்ள மாவை பணியாரங்களாக ஊற்றி, பின் அவற்றின் மேல் லேசாக எண்ணெய் ஊற்றி, மூடி போட்டு 2-3 நிமிடம் வேக வைத்து திறந்து, திருப்பிப் போட்டு வெந்ததும், அவற்றை தட்டில் வைக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்து மாவையும் பணியாரங்களாக சுட்டுக் கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான மசாலா பணியாரம் ரெடி!!! இதனை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் தொட்டு சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications

