Latest Updates
-
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது!
கேரளா தக்காளி ரசம்
ஓணம் பண்டிகையன்று கேரளாவில் சமைக்கப்படும் சமையலில் ஒன்று கேரளா தக்காளி ரசம். இந்த ரசம் வித்தியாசமான செய்முறையைக் கொண்டதோடு, சுவையும் வித்தியாசமாக இருக்கும். நீங்கள் உங்கள் வீட்டில் கேரளா தக்காளி ரசத்தை சமைக்க விரும்புகிறீர்களா?
இங்கு அந்த கேரளா தக்காளி ரசத்தின் செய்முறை தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:
தக்காளி - 2 (பிசைந்தது)
புளி - சிறு நெல்லிக்காய் அளவு
பருப்பு வேக வைத்த தண்ணீர் - 1/4 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
பூண்டு - 6 பற்கள்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாயை 1 நிமிடம் வறுத்து இறக்கிக் கொள்ளவும். பின் புளியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியில் வறுத்த வரமிளகாய், மிளகு, பூண்டு, சீரகம், மல்லி சேர்த்து கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ளதை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, பின் தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு அதில் புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து, அத்துடன் பருப்பு வேக வைத்த தண்ணீர் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, கொத்தமல்லி தூவி, குறைவான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி, பெருங்காயத் தூளைத் தூவினால், கேரளா தக்காளி ரசம் ரெடி!!!



Click it and Unblock the Notifications