Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
உருளைக்கிழங்கு புலாவ்
உருளைக்கிழங்கு புலாவ் ரெசிபியானது மிகவும் அருமையான மற்றும் ஆரோக்கியமான ஒரு புலாவ் ரெசிபி. இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் உருளைக்கிழங்குடன், மூலிகைகளான பார்ஸ்லி, புதினா ஆகியவற்றை சேர்ப்பதால், இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும். மேலும் பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம்.
அதிலும் காலையில் வேகமாக சமைக்க நினைப்பவர்கள், இந்த புலாவ் ரெசிபியை ட்ரை செய்யலாம். சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
பார்ஸ்லி - 2 குச்சி (பொடியாக நறுக்கியது)
புதினா - 1 குச்சி (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
பாசுமதி அரிசி - 1 1/2 கப்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 3
ஏலக்காய் - 4
பட்டை - 1
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து, அரிசியைக் கழுவி போட்டு, சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து, தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு, குக்கரை மூடி 15 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைத்து, பின் விசிலை போட்டு, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்பு விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதில் நறுக்கி வைத்துள்ள பார்ஸ்லி, புதினா, கொத்தமல்லி சேர்த்து கிளறி, 10 நிமிடம் குக்கரை மூடி வைத்து, பின் திறந்தால், சூப்பரான உருளைக்கிழங்கு புலாவ் ரெடி!!!



Click it and Unblock the Notifications