Latest Updates
-
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்!
தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச்
சாண்ட்விச் ஒரு சிறந்த ஸ்நாக்ஸ் போன்றும், காலை உணவாகவும் இருக்கும். மேலும் சாண்ட்விச்சில் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். அதிலும் சாண்ட்விச் பொதுவாக விருப்பத்திற்கேற்றாற் போல் இருப்பதால், விருப்பமான முறையில் பிடித்த காய்கறிகள் அல்லது பழங்களை வைத்து பலவாறு செய்யலாம்.
சரி, இப்போது அவற்றில் தக்காளி மற்றும் பன்னீரை வைத்து எப்படி சாண்ட்விச் செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ப்ரெஞ்ச் பிரட் - 6 துண்டுகள்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
பன்னீர் - 1/2 கப் (நறுக்கியது)
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பிரட்டின் இரண்டு பக்கங்களிலும் வெண்ணெய் தடவி, டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலிலை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, குடைமிளகாய், பன்னீர் மற்றும் தக்காளி சேர்த்து, லேசாக 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, இறக்கி விட வேண்டும்.
பின்பு அந்த தக்காளி கலவையை, டோஸ்ட் செய்த ஒரு பிரட்டின் நடுவே வைத்து, மற்றொரு பிரட் துண்டை வைத்து மூடி பரிமாற வேண்டும்.
இப்போது சூப்பரான தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச் ரெடி!!!



Click it and Unblock the Notifications
