Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ராகி கூழ்
அக்காலத்தில் எல்லாம் காலை உணவாக ராகி அல்லது கம்பு கொண்டு செய்யப்படும் கூழ் தான் சாப்பிட்டு வந்தார்கள். அதனால் தான் நம் பாட்டி, தாத்தா போன்றோர் இன்னும் வலுவுடன் நோய்களின்றி இருக்கின்றனர். ஆகவே நீங்களும் நன்கு வலுவுடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், வாரம் ஒரு முறை ராகி அல்லது கம்பு கொண்டு கூழ் செய்து சாப்பிடுங்கள்.
இங்கு ராகி கூழ் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1 கப்
தண்ணீர் - 5 கப்
சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
தயிர் - 1 கப்
மோர் மிளகாய் - 3
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு அகன்ற பானை/பாத்திரத்தில் ராகி மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டி சேராதவாறு கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை அடுப்பில் வைத்து, கரண்டியால் தொடர்ந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
அப்படி கிளறும் போது, கலவையானது சற்று கெட்டியாகும் போது, அதனை இறக்கி விடவும்.
பின்பு அதில் தயிர் மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, நன்கு கரைக்க வேண்டும்.
பிறகு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், மோர் மிளகாயை போட்டு பொன்னிறமாக பொரித்து, கரைத்து வைத்துள்ள கூழில் சேர்த்து மீண்டும் நன்கு கிளறி, 5 நிமிடம் கழித்து குடிக்க வேண்டும்.
இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி கூழ் ரெடி!!!
Image Courtesy: ushamadhavanskitchen



Click it and Unblock the Notifications
