Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
அடை தோசை
அடை தோசை மிகவும் ஆரோக்கியமான ஒரு காலை உணவு. இந்த தோசையை பல்வேறு பருப்பு வகைகள் சேர்த்து செய்வதால், இதனை காலை வேளையில் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருப்பதுடன், விரைவில் பசியெடுக்காமலும் இருக்கும்.
மேலும் இந்த ரெசிபியை எந்த ஒரு சைடு டிஷ் இல்லாமலும் அப்படியே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம். இப்போது அந்த ஆரோக்கியமான அடை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
புழுங்கல் அரிசி - 1 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)
பச்சரிசி - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)
உளுத்தம் பருப்பு - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)
துவரம் பருப்பு - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)
பாசி பயறு - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)
கொள்ளு - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)
கடலைப் பருப்பு - 1/2 கப் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)
வரமிளகாய் - 8
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 10 பல்
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
எண்ணெய் - 3 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் கொடுக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் பருப்புக்களை ஊற வைத்து நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும்.
அப்படி அரைக்கும் போது, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து மிகவும் மென்மையாக அரைக்காமல், ஓரளவிற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதில் கொத்தமல்லி, கசகசா சேர்த்து கிளறி, துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் பிரட்டி இறக்கி, அதனை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, தோசைகளாக ஊற்றி எடுத்தால், அடை தோசை தயார்!!!



Click it and Unblock the Notifications
