Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
சுவையான... மொச்சை வறுவல்!!!

தேவையான பொருட்கள்:
மொச்சை - 1/2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
வரமிளகாய் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
மல்லி - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
தேங்காய் - 1/4 மூடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மொச்சையை கழுவி குக்கரில் போட்டு, வேக வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் மிக்ஸியை எடுத்துக் கொண்டு அதில், நறுக்கிய வெங்காயம், தக்காளி, வரமிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, மல்லி, மஞ்சள் தூள், துருவிய தேங்காய் ஆகிய அனைத்தையும் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சற்று தாராளமாக எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள கலவையை அதோடு சேர்த்து, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, பின்னர் வேக வைத்துள்ள மொச்சையை சேர்த்து, ஒரு 5 நிமிடம் கிளறி இறக்கி விடவும்.
இப்போது சுவையான மொச்சை வறுவல் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவிப் பரிமாறலாம்.



Click it and Unblock the Notifications
