Latest Updates
-
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க..
ஈஸியான... பட்டாணி புலாவ்!!!
காலையில் நன்கு சுவையான மற்றும் எளிமையான முறையில் ஒரு கலவை சாதம் செய்ய வேண்டுமெனில், அதற்கு பட்டாணி புலாவ் சரியானதாக இருக்கும். மேலும் இந்த பட்டாணி புலாவ் ரெசிபியை, பேச்சுலர்கள் கூட செய்யலாம். அந்த வகையில் இதன் செய்முறை மிகவும் ஈஸியானது.
சரி, இப்போது அந்த பட்டாணி புலாவ் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 1 கப்
பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது)
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
பட்டை - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2-3
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முதலில் அரிசியை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அரிசியைப் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பிறகு மிக்ஸியில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, சீரகம், தேங்காய் மற்றும் பச்சை மிளகாய் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு 1 நிமிடம் வதக்கி, சாதம் மற்றும் பட்டாணி போட்டு கலந்து, உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் பிரட்டி இறக்கினால், சுவையான பட்டாணி புலாவ் ரெடி!!!
குறிப்பு:
வேண்டுமெனில் அரைக்கும் போது பட்டை, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை சேர்க்காமல், அவற்றை நேரடியாக எண்ணெயில் போட்டும் தாளித்துக் கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications
