Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
ஈஸியான... தேங்காய் சாதம்
காலையில் வேகமாவும், நன்கு சுவையுடனும் ஒரு அருமையான கலவை சாதம் செய்ய நினைத்தால், அதற்கு தேங்காய் சாதம் சரியானதாக இருக்கும். மேலும் தேங்காய் சாதமானது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ரெசிபி. அதுமட்டுமல்லாமல், தேங்காய் சாதத்தை பலர் பலவாறு சமைப்பார்கள்.
இப்போது தேங்காய் சாதத்திலேயே மிகவும் எளிமையான செய்முறையைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சித்து பார்த்து, எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
தண்ணீர் - 2 கப்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3-4
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் அரிசியை நன்கு 1/2 மணிநேரம் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கழுவி வைத்துள்ள அரிசியைப் போட்டு, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்கி, சாதத்தை தட்டில் போட்டு உலர வைக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு, முந்திரி, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
* பின்பு துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.
* கலவையானது ஓரளவு பொன்னிறமாக மாறும் போது, சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறி விட்டு இறக்க வேண்டும்.
* இப்போது சூப்பரான மற்றும் ஈஸியான தேங்காய் சாதம் ரெடி!!!



Click it and Unblock the Notifications