Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
Hyderabadi Tomato Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு சட்னி தான் எப்போதுமே பெஸ்ட் காம்பினேஷனாக இருக்கும். சட்னியில் பல வெரைட்டிகள் இருந்தாலும், தக்காளி சட்னியே பெரும்பாலானோரின் விருப்பமான சட்னியாக இருக்கும். அப்படிப்பட்ட தக்காளி சட்னியையே பல வழிகளில் செய்யலாம். இந்த தக்காளி சட்னியுடன் ஒவ்வொரு பிராந்தியத்திலும் வெவ்வேறு பொருட்களை சேர்த்து வித்தியாசமாக அரைப்பார்கள்.

அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது ஹைதராபாத் தக்காளி சட்னி. இந்த ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னி மற்ற தக்காளி சட்னியை போல அல்லாமல் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். இந்த தக்காளி சட்னியை ஒருமுறை செய்து விட்டால் அதை 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம். இந்த ஸ்டைலில் தக்காளி சட்னியை செய்து கொடுத்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட வீட்டில் அனைவரும் அதிகமாக சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு இந்த ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் தக்காளி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 கப் நறுக்கிய தக்காளி
- 1 பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
- 3 பச்சை மிளகாய்
- 5 பல் பூண்டு
- அரை இன்ச் இஞ்சி
- 2 ஸ்பூன் மிளகாய் தூள்
- அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் கடுகு
- அரை ஸ்பூன் புளிக்கரைசல்
- 2 ஸ்பூன் வெல்லம்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- முதலில், ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். பிறகு சீரகம், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
- பின்னர் பூண்டு மற்றும் இஞ்சியைச் சேர்த்து, வாசனை வரும் வரையிலும் பூண்டு பொன்னிறமாகும் வரையிலும் வதக்கவும்.
- அதன்பின் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து, அவை மென்மையாக மாறும் வரை அதிக தீயில் வதக்கவும்.
- இப்போது உப்பு மற்றும் தக்காளியைச் சேர்த்து, மேலும் 2-3 நிமிடங்கள் அதிக தீயில் வதக்கவும்.
- தக்காளி பாதி வெந்ததும் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, அதிக தீயில் மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
- தக்காளி மென்மையாகவும் குழைவாகவும் மாறும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
- இறுதியாக, புளிக்கரைசல் மற்றும் வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும். வெல்லம் கரைந்து சட்னியுடன் நன்றாகக் கலக்கும் வரை மேலும் 2 நிமிடம் கிளறவும்.
- தக்காளி நன்கு வெந்து சட்னி கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான ஹைதராபாத் தக்காளி சட்னி ரெடி. இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications