Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்..
Thattapayaru Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் தட்டப்பயறு உள்ளதா? அந்த தட்டப்பயறைக் கொண்டு ஒரு ருசியான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் சாதம், சப்பாத்தி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிடக்கூடியவாறான ரெசிபியை செய்ய நினைத்தால், தட்டப்பயறுடன் உருளைக்கிழங்கை சேர்த்து கிரேவி செய்யுங்கள். இப்படி கிரேவி செய்யும் போது, வீட்டில் உள்ளோர் அனைவரும் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு தட்டப்பயறு கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தட்டப்பயறு கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 3
* பட்டை - 1 துண்டு
* கல்பாசி - சிறிது
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தட்டைப்பயறு - 1 கப் (8 மணிநேரம் நீரில் ஊற வைத்தது)
* உருளைக்கிழங்கு - 2 (தோல் நீக்கி துண்டுகளாக்கப்பட்டது)
* அரைத்த தேங்காய் விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் தட்டப்பயறை நீரில் 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், மிளகு, சீரகம், சோம்பு,
கசகசா, கிராம்பு, பட்டை, கல்பாசி ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு 1 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ஊற வைத்த தட்டப்பயறை சேர்த்து, அத்துடன் 2
உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கி சேர்த்து நன்கு 2 நிமிடம்
கிளறி விட வேண்டும்.
* பின் அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, கிரேவிக்கு தேவையான
அளவு நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குக்கரை
மூடி, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
கிளறினால், சுவையான தட்டப்பயறு கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
