Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தயிர் குருமா
கோடையில் தயிர் அதிகம் சாப்பிட்டால், உடல் நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும். அதிலும் இதுவரை தயிரை மோர் போன்று கடைந்து தான் குடிப்போம். இல்லையெனில் அதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவோம். ஆனால் அத்தகைய தயிரை மோராக செய்வது மட்டுமின்றி, தயிர் குருமா போன்றும் செய்யலாம்.
குறிப்பாக அந்த தயிர் குருமாவில், விருப்பமான காய்கறிகளை சேர்த்து சமைக்கலாம். சரி, இப்போது தயிர் குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ (தோல் சீவி, நறுக்கியது)
பச்சை பீன்ஸ் - 1/4 கிலோ (நறுக்கியது)
வெங்காயம் - 3 (நறுக்கியது)
புளிக்காத தயிர் - 1 1/2 கப்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
முந்திரிப் பருப்பு - 10
கசகசா - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 7
செய்முறை:
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஒரு பாத்திரத்தை வைத்து, நறுக்கிய காய்கறிகளை போட்டு, அவை மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்கிவிட வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்தப் பொருட்களை போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
பிறகு அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து, தயிரை கடைந்து ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் கரம மசாலா சேர்த்து, குருமா சற்று லேசாக கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தயிர் குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
