Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
உருளைக்கிழங்கு பூரி
பொதுவாக கோதுமை மாவைக் கொண்டு தான் பூரி செய்வோம். ஆனால் உருளைக்கிழங்கு கொண்டு பூரி செய்திருப்போமா? ஆம், உருளைக்கிழங்கு மற்றும் மைதா கொண்டு அருமையான சுவையில் கூட பூரி செய்யலாம்.
இந்த பூரி அனைவருக்கும் பிடித்தவாறு இருக்கும். குறிப்பாக காலை வேளையில் செய்வதற்கு எளிமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 2-3 கப்
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குகளை போட்டு, கைகளால் நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கரம் மசாலா, உப்பு மற்றும் சீரகப் பொடி சேர்த்து மீண்டும் பிசைய வேண்டும்.
பின்பு அதில் மைதா மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு, தண்ணீர் விடாமல் பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை மைதா போதவில்லையெனில், அத்துடன் வேண்டிய அளவு மைதா மாவை சேர்த்து, பிசைந்து கொள்ளவும்.
பிறகு அதனை சிறு உருண்டைகளாக பிரித்து, பூரிகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு அகன்ற கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூரிகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான உருளைக்கிழங்கு பூரி ரெடி!!! இதனை பன்னீர் மசாலா அல்லது சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
குறிப்பு:
பொதுவாக பூரிக்கு மாவு பிசைந்த பின்னர், அந்த மாவை சிறிது நேரம் ஊற வைப்போம். ஆனால் இந்த பூரிக்கு அப்படி ஊற வைக்கக்கூடாது. ஏனெனில் இதில் உள்ள உருளைக்கிழங்கானது நீரை வெளியேற்றும். எனவே உருளைக்கிழங்கு பூரிக்கு மாவை பிசைந்த பின்னர், உடனே அதனை பூரிகளாக சுட்டு விட வேண்டும்.



Click it and Unblock the Notifications

