Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சூப்பரான... சன்னா உசல்!!!
மாலை வேளையில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள், கொண்டைக்கடலையை வைத்து மராத்தி ரெசிபியான சன்னா உசலை செய்து, பிரட்டுடன் சாப்பிட்டால், ருசியாக இருக்கும். இப்போது அந்த சன்னா உசலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

கொண்டைக்கடலை - 50 கிராம்
பூண்டு - 4 பல் (அரைத்தது)
சீரகம் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை கழுவி, குக்கரில் போட்டு 3 விசில் விட்டு இறக்கவும். பின் அதில் உள்ள நீரை வடித்து, கடலையை ஒரு பௌலில் போட்டுக் கொள்ளவும்.
மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கவும்.
பிறகு அதில் 2 கப் தண்ணீர் விட்டு, கொதிக்கவிடவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள கொண்டைக்கடலை, அரைத்த பூண்டு, கரம் மசாலா தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து 15 நிமிடம் கொதிக்க விடவும்.
அதற்குள் மற்றொரு வாணலியில் எண்ணெய் விட்டு, அதில் சீரகம் மற்றும் கறிவேப்பிலையை போட்டு தாளித்து, அந்த மசாலா கலவையில் ஊற்றி, ஒரு முறை பிரட்டி இறக்கவும்.
இப்போது சுவையான சன்னா உசல் ரெடி!!! இதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சாஸை விட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications