Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சன்னா மத்ரா: ஹிமாச்சல பிரதேச ரெசிபி
உலகிலேயே இந்திய உணவுகளின் சுவைக்கு இணையாக வேறு எதுவும் வர முடியாது. அத்தகைய இந்திய உணவுகளில் நிறைய உள்ளன. அந்த வகையில் ஹிமாச்சல பிரதேசத்தில் மிகவும் பிரபலமான சன்னா மத்ரா என்னும் கிரேவியின் செய்முறையைத் தான் இப்போது பார்க்க போகிறோம்.
இந்த கிரேவியானது சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு அருமையாக இருக்கும். சரி, இப்போது அந்த சன்னா மத்ரா என்னும் கிரேவியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - 3 கப்
தயிர் - 2 கப்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கிராம்பு - 2-3
பட்டை - 1
கருப்பு ஏலக்காய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
உலர் பழங்கள் - சிறிது
நெய் - 4 டேபிள் ஸ்பூள்
செய்முறை:
முதலில் கொண்டைக்கடலையை நீரில் இரவில் படுக்கும் போதே அல்லது குறைந்தது 5 மணிநேரம் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, குக்ரில் போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு விசில் போனதும் குக்கரை திறந்து, அதில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு, கொண்டைக்கடலையை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், பெருங்காயத் தூள், கிராம்பு, பட்டை, ஏலக்காய் மற்றும் சோம்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
அடுத்து தயிரில் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு, வாணலியில் ஊற்றி, தீயை குறைத்து, லேசாக கொதிக்க விட வேண்டும்.
கிரேவியானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, கொண்டைக்கடலை, உப்பு மற்றும் உலர் பழங்களை சேர்த்து கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட்டு இறக்கினால், சன்னா மத்ரா ரெடி!!!



Click it and Unblock the Notifications
